பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 அவ்விதமாகப் பலவகைகளில் மாற்றிச் சுருள் சுரு ளாக வாசித்துக்கொண்டு போகிருன். இதற்குப் பொருள் என்ன? ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று : 'காளிக்குப் பூச்சூட்டினேன். அதைக் கழுதை யொன்று தின்ன வந்ததே. பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது. பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்து விட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்க லாயினள் அவள் வாழ்க." பாம்புப் பிடாரன் குழலூதுகின்றன். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப் பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது; குழல் தனியே இசை புரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும்; மூச்சுக் குழலிலே ஒட்டும்; குழல் பாடும். இஃது சக்தியின் லீலை.