பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அவள் உள்ளத்திலே பாடுகிருள். அது குழலின் தொளையிலே கேட்கிறது. பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசை யுண்டாக்குதல்-சக்தி. தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலை யும் யார் கருதி சேர்த்துவிட்டது? சக்தி. 'ஜரிகை வேணும்; ஐரிகை!" என்ருெருவன் கத்திக் கொண்டு போகிருன், அதே சுருதியில். ஆ! பொருள் கண்டு கொண்டேன். பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரி லும், ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடு கின்றது. கருவி பல. பாணன் ஒருவன். தோற்றம் பல. சக்தி ஒன்று. அஃது வாழ்க. பராசக்தியைப் பாடுகின்ருேம். இவள் எப்படி உண்டாயினுள்? அதுதான் தெரிய வில்லை. இவள் தானே பிறந்த தாய்: "தான் என்ற பரம் பொருளி னிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினுள்? 'தான் என்ற பரம் பொருளிலிருந்து எப்படித் தோன்றினுள்? தெரியாது. படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது: அறிவுக்கும் தெரியாது. சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்குதி தெரியாது.