பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல். உள்ளம் தெளிந்திருக்க: உயிர் வேகமும் குடும் உடையதாக உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல். நாம் வாழ்கின்ருேம். நம்மை வாழ்வுறற் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்ருேம். 51, சிவசக்தி (குறிப்பு : பாரதியார் தமது இஷ்ட தெய்வமாகிய பராசக்தியின் பெருமையைப் பலவகையாகப் புகழ்ந்து பாடியுள்ளார். இன்பமென்றும், துன்பமென்றும், இயற்கை யென்றும், ஐம்பூதங்களின் சேர்க்கையென்றும், பராசக்தி யை வாயாரப் புகழ்கின்டுர். பாரதியார் தம்மிடம் வந்து பராசக்தி தனக்கு விரும்பியவாறு கவிதை எழுதவேண்டு மென்று கேட்டுக்கொடைாள் என்கின்ருர். ஏழையேன் கவிதை யாவும் பராசக்தி தகைகேனக் கேட்கின்ருள். நான் என்ன செய்யட்டும்? “சொல்லினுக்கெளிதாகவும் நின்றி டாள். சொல்ல வேறிடஞ் செல்ல வழிவிடாள்" என்கிருர் பாரதியார்.) இயற்கையென் றுரைப்பார் - சிலர் இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்; செயற்கையின் சக்தியென்பார் . உயிர்த் தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்; ԼIIT • க.-8