பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மும்மையின் உடைமைகளும் - திரு முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்; அம்மைநற் சிவசக்தி - எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய். பராசக்தி கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார் காவி யம்பல நீண்டன கட்டென்பார் விதவிதப் படு மக்களின் சித்திரம் மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்; இதயமோ எனிற் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால், எதையும் வேண்டில தன்னை பராசக்தி இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடென் ருெரு தெய்வங் கூறுமே: கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டி லேயறங் காட்டெனு மோர்தெய்வம்; பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஒதெனும் வேருென்றே. நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நாணி லத்தவர் மேனிலை யெய்தவும் பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னு கின்ற பொழுதி லெல்லாங்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்ருள்.