பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii புதுவையிலிருந்து மீண்டும் சுதேசமித்திரன் துணை ஆசிரிய ராக சென்னையில் அமர்ந்தபோதும், குள்ளச் சாமியாரை வரவழைத்த முயற்சி இங்கு கவனிக்கத்தக்கது. தாயுமான சுவாமிகள் முடிந்த முடிவாக ரத்தினச் சுருக்க மாகப் பாடியிருப்பதைக் கேளுங்கள். 'அருளால் எவையும் பார் என்ருன்-அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள் கண்ட தல்லால்-கண்ட என்னையுங் கண்டிலன் என்னடி தோழி? இவ்வாறே பல மெய்ஞ் ஞானிகளும் தமது அனுபவத் தால் கண்டதைக் கூறியுள்ளனர். இதனை விளக்கமாக ஆராய்ந்து தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். விரிக்கில் பெருகும். மனித மனம் மிக அற்புதமானது. அதற்கு வசப்படாதது உலகில் ஒன்றும் இல்லை. மொத்தமாகத் தமிழ் இலக்கியப் படைப்புகளை நோக்கும்போது பாரதியாரை ஓர் ஆத்ம ஞானி என்றே சொல்லத் தோன்றலாம்; ஆனல் பூரீராமகிருஷ்ண பரம ஹம்சர் வேறு; பாரதியார் வேறு. அல்லது ஒருவேளை காலப் போக்கில் பாரதியார் ஒர் ஆத்ம ஞானி என்றே மெய்ப்பிக்கப் படுமாயின் என்னைவிட மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். மேலும் ஒரு வார்த்தை பாரதியார் வரிசையிலே எட்டு நூல்கள் மிக அழகாக வெளியிட்ட வானதி பதிப்பகத் தாருக்கும், என் முயற்சியைப் பாராட்டி அணிந்துரை வழங்கிய அறிஞர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றி உரியதாகும். ம. ப. பெரியசாமித் தூரன்