பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம், அகம், அகம், அகம், சிவ, 126 சக்தி தனக்கே அடிமை யாக்கு - தெளி தந்தமுப் பொய்கையென ஒளிரும் - மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சந்தமும் இன்பமுற மிளிரும். 41 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தாமதமும் ஆணவமும் தீரும். 42 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தன்னையவள் கோயிலென்று காணும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தன்னையெண்ணித் துன்பமுற நாணும். 43 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - சிவ சக்தி யுண்டு நமக்கில்லை கவலை. 44 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம் சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும். 45 சக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவ சக்திசக்தி என்று குதித் தாடு - சிவ சக்தி என்றும் வாழி! என்று பாடு - சிவ சக்திசக்தி என்றுவிளை யாடு. 46