பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. கலைமகளை வேண்டுதல் (குறிப்பு : பாரதியார் ஒருசமயம் மூன்று மாதம் புதிய கவிதை இயற்ற வில்லையாம். இதைப்பற்றிக் கவலையோடு கேட்டதற்கு பாரதியார் பதில் சொல்லுகிருர். "ராஜாராம் என்ற புதுவை நண்பர் ஒருவர் தமது தந்தையார் தமிழில் மொழிபெயர்த்த ஒரு நூலைச் செப்பனிடும்படி கேட்டுக் கொண்டார். அதனல் மூன்று மாதம் புதிய கவிதையே இயற்றவில்லை. இப் பொழு து அது முடிந்துவிட்டது. கலைமகள் துதியுடன் இனிப் புதிய கவிதைகள் இயற்றுவேன்' என்று பதில் சொன்னராம். எங்ங்ணம் சென்றிருந்தீர் - எனது இன்னுயிரே! என்றன் இசையமுதே! என்ற வரிகள் இச்செய்தியைக் குறிப்பாகக் காட்டு கின்றன.) (நொண்டிச்சிந்து) எங்ங்ணம் சென்றிருந்தீர் - எனது இன்னுயிரே! என்றன் ஆசையமுதே! திங்களைக் கண்டவுடன் - கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன், கங்குலைப் பார்த்தவுடன் - கடல் காலையில் இரவியைத் தொழுதவுடன் பொங்குவீர் அமிழ்தெனவே . அந்தப் புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 1