பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 மாதமொர் நான்காநீர் - அன்பு வறுமையி லேயென வீழ்த்திவிட்டீரி: பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன் பாவமெலாங் கெட்டு ஞானகங்கை நாதமொ டெப்பொழுதும் - என்றன் நாவினி லேபொழிந் திடவேண்டும்; வேதங்க ளாக்கிடுவீர்! - அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்! 2 கண்மணி போன்றவரே! - இங்குக் காலையும் மாலையும் திருமகளாம் பெண்மணி யின்பத்தையும் - சக்திப் பெருமகள் திருவடிப் பெருமையையும், வண்மையில் ஒதிடுவீர் - என்றன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்! அண்மையில் இருந்திடுவீர்! - இனி அடியனைப் பிரிந்திடில் ஆற்றுவனே? 3 தானெனும் பேய்கெடவே, - பல சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே, வானெனும் ஒளிபெறவே, - நல்ல வாய்மையி லேமதி நிலைத்திடவே, தேனெனப் பொழிந்திடுவீர் . அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்! ஊனங்கள் போக்கிடுவீர் - நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 4.