பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை (குறிப்பு: எல்லாத் தெய்வங்களும் ஒன்று தான் என்பதை விளக்க பாரதியார் ஒரு கதை வடிவமாகச் சொல்கின்ருர். கதையைக் கேட்பதில் எல்லாருக்கும் விருப்பம்தான். ஆகவே இந்தத் துறையையும் சுவையாகக் கையாளுகின்ருர் பாரதியார். விஷ்ணு தங்கை பார்வதி; பார்வதி புருஷன் சிவன். இதை கதாகாலட்சேபங்களில் ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். ஆனல் விஷ்ணு உயர்வா? சிவன் உயர்வா? என்ற கேள்வி எழுகின்ற காலத்திலே சண்டை போட்டுக் கொள்கிரு.ர்கள். நல்லவேளையாக இந்தச் சண்டை கொஞ்சம் ஒய்ந்திருக்கிறது. இப்பொழுது காஞ்சி காமகோடி பீடத்து நடமாடும் தெய்வமாகிய ஜகத்குரு சங்கராசாரியர் முயற்சியினல் மார்கழித் திங்களிலே திருப்பாவை, திருவெம்பாவை முதலிய சொற்பொழிவுகளை ஒரே மேடையில் பேசக் கேட்கின்ருேம். வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதையிலும் பாரதியார் இதே கருத்தை ஒரு கதை வடிவமாகச் சுவையாக விளக்க முயல்கின்ருர்.) வேதபுரத்தின் வீதியில் ஒரு பண்டாரம் நன்ருகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அவன் நெற்றியிலே ஒரு நாமம். அதன் மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப்பொட்டு. "உனக்கு எந்த ஊர்?' என்று கேட்டேன்.