பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 போளுள், அவ்விடத்து ராஜகுமாரர்களையெல்லாம் வேண் டாம், வேண்டாம் என்று களைந்து போய், இந்த பால்ய லந்யாஸியைக் கண்டு புஷ்ப மாலையை அணிந்தாள். அந்த புஷ்ப மாலையானது பாம்பாகி மேற்படி ஸ்ந்யாஸியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல் வந்துவிழ, அவன் திடுக்கிடாமல் 'ஓம் சக்தி” "ஓம் சக்தி' என்ற மந்திரத்தை ஜபித்து மனதை தைரியப்படுத்திக் கொண்டான். பிறகு அதே மாலே பரிமள கந்தமுடைய புஷ்பமாலையாய் விட்டது. இதனை மேற்படி மகரிஷியானவர், அந்த ராஜனிடத் திலே காண்பித்து, 'இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப் பட்ட தைரியத்துடன் வாழவேண்டும். மனமாலையே பாம்பாக வந்து விழுந்தபோதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ் விதமான தைரியத்தில் நிற்பார் வீடு பெறுவர். துறவறத் துக்கும் இதுவே வழி. ஆகவே "இரண்டும் ஒன்றுதான்' என்று சொன்னர். 3. வண்ணுன் தொழில் (குறிப்பு :-பாண்டிச்சேரியில் குள்ளச்சாமி என்ற பரதேசி இருக்கிருர். இவருக்கும் பாரதி யாருக்கும் எப்படியோ தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஒரு அழுக்கு முட்டையை முதுகில் சுமந்துகொண்டு வருவாராம். ஏன் இவ்வாறு அழுக்கு மூட்டையைச் சுமக்கிறீர்?" என்று கேட்டால், 'நான் அழுக்கு மூட்டையை வெளியே சுமக்கிறேன்; நீ உள்ளே சுமக்கிருய்.