பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 முதலாவது நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. அந்தக் கரணத்தை கத்தி செய்துவிட்டால் விடுதலை உண்டாகும்' என்று பதில் சொல்லுகிரு.ர். இந்த குள்ளச்சாமியிடம் நெடுநாள் தொடர்பு பாரதியாருக்கு இருந்திருக்கிறது. பாண்டிச் சேரியை விட்டுச் சென்னை அடைந்தபோதும் பாரதியாரைத் தேடிவந்திருக்கிருர். இவருடைய தொடர்பினுல்தான் ஒரு சில தீய வழக்கங்கள் பாரதியாருக்கு ஏற்பட்டிருக்கின்றன. பாரதி அறுபத்தாறு என்ற கவிதையிலும், பாரதியார் இவரைப்பற்றிப் பாடியுள்ளதை நாம் அறிந்திருக் கிருேம். திரு வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை யும் சென்னைக்கு வந்தபோது இவர் சென்று கண்டிருக்கிரு.ர். ஆனல் சிதம்பரம் பிள்ளை அவர்கள் கண்ணுக்கு குள்ளச்சாமி சாதாரண மனிதர்போலவே காணப்படுகிருர் என்பது கவனிக்கத்தக்கது.) வேதபுரத்தில் குள்ளச்சாமி என்ருெரு பரதேசி இருக் கிருர். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கருநிறம். குண்டு சட்டியைப் போல முகம். உடம்பெல்லாம் வயிரக்கட்டை போலே நல்ல உறுதியான பெயர்வழி. அவருக்கு வியாதி என்பதே கிடையாது. சென்ற பத்து வருடங்களில் ஒரே தடவை அவர் மேலே கொஞ்சம் சொரி சிறங்கு வந்தது. பத்து நாளிருந்து நீங்கி விட்டது. அந்த மனுஷ்யன் ஜடபரதருடைய நிலமையிலே இருப்ப தாகச் சொல்லலாம். பேசினல் பயித்தியக்காரன் பேசுவது