பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 போலிருக்கும். இழுத்து, இழுத்து, திக்கித் திக்கி, முன் பின் சம்பந்தமில்லாமல் விழுங்கி விழுங்கிப் பேசுவார். தெரு விலே படுத்துக் கிடப்பாரி. பசித்தபோது எங்கேனும் போய்ப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார். கஞ்சாத் தின்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடண் சண்டை போடுவார். வீதியிலே பெண்பிள்ளைகளுக்கெல்லாம் அவரைக் கண் டால் இரக்கமுண்டாகும். திடீரென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து, வீட்டிலிருக்கும் அந்த குழந்தைகள் நெற்றியிலே திருநீற்றைப் பூசிவிட்டு ஒடிப்போவார். யாராவது திட்டி லுைம், அடித்தாலும் பொறுத்துக்கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு ஒடிப்போய்விடுவார். ஸாமானிய ஜனங்கள் அவருக்கு நூறு வயதுக்கு மேலே ஆகிவிட்டதென்றும், நெடுங்காலமாக இப்போதிருப்பது போலவே, நாற்பத்தைம்பது வயது போலேதான் இருக்கிரு ரென்றும் சொல்லுகிரு.ர்கள். ஆனல் இந்த வார்த்தை எவ்வளவு நிச்சய மென்பதை நிர்ணயிக்க இடமில்லை. அவர் கையால் விபூதி வாங்கிப் பூசிக் கொண்டால் நோய் தீர்ந்து விடுமென்ற நம்பிக்கையும் பலர் கொண் டிருக்கிருர்கள். மேற்படி குள்ளச்சாமியார் ஒருநாள் தாம் வீதியில் நடந்து வரும்போது, முதுகின் மேலே கிழிந்த பழங் கந்தை களே யெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்தார். இந்தச் சாமியாரைக்கண்டால் நான் கும்பிடுவது வழக்கம். அப்படியே கும்பிட்டேன். ஈயென்று பல்லைக் காட்டிப் பேதைச் சிரிப்புச் சிரித்தார். கண்ணைப் பார்த்தால் குறும்பு கூத்தாடுகிறது.