பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 யிலும் இவரைப்பற்றிக் குறிப்பிடுகின்ருர். இவர் ஒரு பரமஹம்சர் என்றே பாரதியார் சொல்லு கின்ருர். சிறு குழந்தை போன்றவர் என்றும் கூறுகின்ருர். சிதம்பரமே (பூரீரங்கம் என்றும் அதுவே பழனிமலை என்றும் பாரதியார் இக் கட்டுரையிலே குறிப்பிடுகின்ருர். இவ ற்றிலிருந்து சிதம்பரம், பழனிமலை, பூரீரங்கம் என்ற திருப்பதி கள் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தவைகள் என்று உணரலாம். "சும்மா' என்ற கட்டுரையில் குள்ளச்சாமி பற்றி ஒரு சுவையான செய்தி வெளிவந்துள்ளது. இப்படி ஏகாந்தமாய் மேல் மொட்டை மாடியில் உலவியவரை, அங்கே தேடி வந்து, குள்ளச்சாமியின் அருமை பெருமைகளை விவரிக் கிறது 'சும்மா' என்ற கட்டுரை. "கண் மூடித் திறக்கு முன்னகவே கைச்சுவர்மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல் மெத்தைக்கு இரண் டாம் பாய்ச்சலில் வந்து விட்டார் சாமியார்” என்கிருர் பாரதியார். சாமியாரைத் தொடர்ந்து தானும்பாய்ந்தேற முயன்று கீழே விழுந்த வஸ் தாது வேணுமுதலி என்ற நண்பனுக்கு பலத்த ஊமைக் காயங்கள்! இந்தச் சம்பவம் நடந்த தினம் சாமியார் களை வேணுமுதலி ஏதோ குறை கூற, 'ஹிந்துஸ் தானத்து மஹா யோகிகளின் மகிமையைப் பார்" என்று குள்ளச்சாமி ஒரு அதிசயம் செய்து காட் டினர். திடீரென குள்ளச்சாமி நெடியசாமி ஆகி விட்டார்! பாரதி கூறுகிருர் : "நாலேமுக்கால்