பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 துணி. வேதபுரத்தில் தங்கும் நரட்களிலே இவர் பெரும் பாலும் கடலோரத்தில் உலாவிக் கொண்டிருப்பார். அல்லது தோணிகளுக்குள்ளே படுத்துத் தூங்குவார். இந்தக் கடற்கரையாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின்மேல் உட்கார்ந்து கொண்டு, "என்ன யோசனை செய்கிருய்?" என்று கேட்டார். "விதியைப் பற்றி யோசனை செய்கிறேன்' என்றேன். "யாருடைய விதியை’ என்று கேட்டார். என்னுடைய விதியை உம்முடைய விதியை இந்தக் கடலின் விதியை; இந்த உலகத்தின் விதியை’ என்று சொன்னேன். அப்போது க ட ற் க ைர ய | ண் டி. சொல்லுகிருர்: - 'தம்பி உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது. ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே" என்ருர். "எதஞலே?" என்று கேட்டேன். அப்போது, அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின் வரும் பாட்டை ஆச்சரிய மான நாட ராகத்தில் பாடினர். சேல்பட் டழிந்தது செந்துார் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யாரிமனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்த திங் கென்றலை மேலயன் கையெழுத்தே!"