பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கந்தரலங்காரத்தில் நான் பல முறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும்போது, எனக்குப் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய் விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னர். மூன்ருவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளிகொண்டு ஆவேசம் ஏறிப்போய்விட்டது. வேல் பட்டழிந்தது வேலை (கடல்)" என்று சொல்லும்போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினர். கடல் நடு ங் கு வ துபோல் என் கண்ணுக்குப் புலப்பட்டது. பிறகு சொன்னர் : தெய்வத்தின் வேலாலே கடல் உடைந்தது, மலை தூளாய் போய்விட்டது. சூரபத்மன் சிதறிப்போனன். அந்த முருகனுடைய திருவடி என் முடிமீது தொட்டது. நான் விடுதலை கொண்டேன். விடுதலைப்பட்டது பாச வினை விலங்கே." இங்ங்ணம் அவர் சொல்லிக்கொண்டிருக்கையில் மழை வந்து விட்டது. நானெழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். அவர் அப்படியே அலையில் இறங்கி ஸ்நானம் செய்யப் போனர். நான் மணலைக் கடந்து சாலையில் ஏறும்போது, கடற்புறத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே விடுதலை; விடுதலை; விடுதலை என்ற ஒலி கேட்டது. 6. செய்கை (குறிப்பு : செய்கை என்ற கட்டுரையில் பாரதியாருக்கும் இடி பள்ளிக்கூடத்துப் பிரம்ம ராய அய்யருக்கும் வீரப்பமுதலியாருக்கும் நடந்த