பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I55 சுவையான உரையாடலைப் பற்றி வருகின்றது. இதில்தான், 'வில்லினை யெடடர் - கையில் வில்லினை யெடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா! என்ற அ ற் பு த மா ன கவிதை வரிகள் வருகின்றன. இதை ஒ ரு வ ைக யி ல் கீதை உபதேச சாரமாகக் கொள்ளலாம்.) வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அத்தக் கோவிலில் எழுந்தருளி யிருக்கும் சுப்ரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்ந மிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது. அன்று காலையில் ஸ்வாமிக்குப் பலவிதமான அபிஷேகங்கள் நடந்தன. சந்தனபிஷேகம் நடக்கும் ஸ்மயத்தில் நான் ஸந்நிதிக்குப் போய்ச் சேர்ந் தேன். எனக்கு முன்னகவே என்னுடைய ஸ்நேகிதர் பிரம்மராய ஐயர் அங்கு வந்து தரிசனம் பண்ணிக்கொண் டிருந்தார். 'சூரபத்மனை அடித்த உஷ்ணம் அமரும் பொருட்டாக எம்பெருமான் சந்தனுபிஷேகம் செய்து கொள்ளுகிருன்' என்று பிரம்மராய ஐயர் சொன்னர். அங்கே ஒரு பிச்சி (பிடித்துக் கொண்டவள் போலே காணப்பட்ட பெண்) வந்து கந்தர் ஷஷ்டி கவசம் சொல்லிக்கொண்டு ஸந்நிதி யிலே நின்று நர்த்தனம் செய்தாள். இந்த வினேதமெல் லாம் கண்டு, பிறகு தீபாராதனை சேவித்துவிட்டு, நானும் பிரம்மராய ஐயரும் திருக்குளத்துக் கரைமண்டபத்தில் போய் உட்கார்ந்தோம். அங்கே விடுதலையைப்பற்றி பிரம்மராய ஐயர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.