பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 செயல் யாதொன்றுமில்லை" என்ற முன்னேர் பாடலை எடுத்துச் சொல்லி, சக்தி நாமத்தைக்கூறி, "நான் செய்கை யற்று நிற்கின்றேன். பராசக்தி என் மூலமாக எது செய் வித்தாலும் அவளுடைய இஷ்டமே யன்றி என்னுடைய இஷ்டமில்லை" என்றேன். இந்த சமயத்தில் தண்டபாணிக்குப் பூஜை நடந்து தீபாராதனையாய்க் கொண்டிருப்பதாக ஒருவன் வந்து சொன்னன். எல்லாரும் எழுந்து ஸேவிக்கப் புறப்பட் டோம். சபை கலைந்தது. 7. உண்மை (ரத்தினக் களஞ்சியம்) (குறிப்பு : இந்தக் கட்டுரை 1916 ஜூன் மாதம் 26ம் தேதி வெளியாகியுள்ளது. பாரதி யார் தமது சமயக் கொள்கையை இதிலே தெளி வாகக் கூறுகின்ருர் - நம்பிக்கையே காமதேனு என்று 1617 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி "நம்பிக்கை' என்ற கட்டுரை வெளியாயிருக் கின்றது. இதன் முடிவுரை நமது கவனத்திற்குரியது. இதில்தான் முடிந்த முடிவாக தமது சமயக் கருத் துக்களே திரட்டிக் கூறுகின்ருர். பாரதியார் கூறுகின்ருர் 'எனவே, எல்லா மதங்களும் உண்மைதான். ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதஸ்தரும்