பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 "ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போகவேண்டாம். அவர்கள் உண்மை நெறியினின்றும் தவறிவிட்டார்கள்.” ருவியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ்தோய்): "நமது மதக் கொள்கைகளில் பயனில்லாதது, ஜட மாவது, புறவடிவமாவது, தெளிவில்லாதது, நிச்சய மில்லாதது - இவற்றை நாம் பயனில்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன் ஸாரத்தை மாத்திரம் கொள்ள வேண்டும். எத்தனைக்கெத்தனே இந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்துகிருேமோ, அத்தனைக்கத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்." எது தெய்வம்? ஹெர்மெஸ் என்ற புராதன மிசிர (ஈஜிப்டு) தேசத்து ஞானி சொல்லுகிருர் : 'உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது, ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது - இது தெய்வம்." ராமகிருஷ்ண பரமஹம்ஸர் : - 'ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்தது போல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்.” பட்டினத்துப்பிள்ளை - எட்டுத் திசையும் பதினறு கோணமும் எங்குமொன்ருய் முட்டித் ததும்பி முளைத் தோங்கும் ஜோதி.” தாயுமானவர் :- சுத்த அறிவே சிவம்." ரிக்வேதம் :-'உண்மைப் பொருள் ஒன்று. அதனைப் புலவோர் பலவாறு சொல்லுகிருர்கள்."