பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 மூன்று கட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று: அதனை ஆாரதனை செய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராச்சாரியரே ஷண்மத ஸ்தாபனமும் செய்த தாக அவருடைய சரித்திரம் சொல்லுகிறது. பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக் காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர். பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போல வும், பார்த்தபொருளைக் கண் நம்புவதுபோலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்பவேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்கவேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும். செல்வம் வேண்டுமானல், தெய்வத்தினிடம் கேட்க வேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்கும். தெய்வம் கொடுக்கா விட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப் பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்டவரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும், இது கர்மவிதி. அடுத்து முயன் முலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா. எனவே, நாம் தெய்வத்தினிடம் பயன் கைகூடுவதற்கு எத்தனை காலமானபோதிலும், அதைரியப்படாமல், தெய்வபக்தி யையும் அதலுைண்டாகும் ஊக்கத்தையும், முயற்சியையும் துணையாகக்கொண்டு நடக்கவேண்டும். விதியின் முடிவுகளை தெய்வபக்தி வெல்லும். இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கைகூடும். நம்பு கேள். ஓயாமல்