பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 கலாசாலையில், பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ் ஞானத்தை ஊட்டத் தவறலாகாது. இந்த ஸமரஸ் ஞானம் இல்லாவிட்டால் எந்த சித்தாந்தமும் நாளடைவில் பொய் யாகவும், குருட்டு நம்பிக்கையாகவும், வீண் அலங்கார மாகவும் முடிந்து ஜனங்களை மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில் ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது. உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும் நாராயணன் விளங்கு வது கண்டு, அந்த ஞானத்தாலே கலியை வென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படி கண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்தி அருள் செய்க. 9. இனி (குறிப்பு : பாரதியார் இக் கட்டுரையிலே சில முக்கியமான கருத்துக்களைத் தெரிவிக்கிரு.ர். "உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்' என்கிரு.ர். மேலும் அவர் சொல்லுகிருர், "கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன். ஆணுகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண்தெய்வம் எல்லாம், உனது தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண் களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக்