பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 குறிப்பிடுகின்றன. அம்மன் தாய்; அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்கவேண்டும் என்று தெளிவாகச் சொல்லு கிருர், ஆண்தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடையவேண்டிய நிலைமையைக் குறிப் பிடுகின்றன. சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லக்ஷ்மிஉன் மனைவி. பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி. பெண்களுக்கு சரிநிகர் சமானமாக வாழ் வோம் இந்த நாட்டிலே’ என்று பாடியவர் இப்பொழுது அவர்களை தெய்வநிலைக்கு உயர்த்தி விட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.) நடந்ததெல்லாம் போக: இனிமேல் நடக்கவேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும். கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானல், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்ருமல், விஷயத்தைச் சொல்லவேண்டும். 'கடவுள் எங்கும் இருக்கிருரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?' என்ருல், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக,