பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோ தரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி. பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதைப் பூசாரிகள் மறைக்கிருர்கள். கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லதென்று பூசாரி யோசனை பண்ணுகிருன். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படியிருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய் வாம்சம் இருப்பதுபோலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிரு.ர்கள். - கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடி வைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரி களுடைய சாயம் சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிருர்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படி சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தி யுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அது போல் யோக்யதையில்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில்