பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 கைவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பரமாத்மாவின் கோவில்களென்றும், கோயில் களுக்குள்ளே ககதி பேதங்கள் கிடையாவென்றும் பண்டித பாமரர்கள் நன்ருகத் தெரிந்துகொள்ளவேண்டும். ப்ரக்ருதி இயற்கைத் தோற்றம்; காணப்படுகிற உலகம் விஷ்ணுவுடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங் கலாம், மலையிலும் வணங்கலாம், தூணிலும் துரும்பிலும் வணங்கலாம். சிலைகளிலே வணங்குதல் ஒரு வகை யோகம். வேதரிவிகள் இந்த விஷ்ணுவை, இந்த்ரனை, ஸஅர்யனை, ருத்ரனை நேராகக் கண்டு வணங்கினர்கள். உலகமே இவனுடைய உடம்பாதலால் அவர்கள் உலகத்தை வணங் கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸஅர்யனுமிருப்பது போலே வெளியுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று. மற்ருெரு முறை விளங்கச் சொல்லுகிறேன். புயற் காற்றடித்தது. வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்ருர்கள். ஆயிர மின்னல்கள் வாள்போலே வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினர்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உடற் செய்கை தானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடி யையும் காட்டுகிருன். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தண்ணிர் கிடைக்கிறது. இதில் பயத்துக் கிட மெங்கே? ரிஷி புயற்காற்றைத் துதிக்கிருர். பிறகு, இரவு நீங்கி ஸஅர்யோதயம் உண்டாகிறது; ஒளி தோன்றுகிறது. அதைப் பார்த்து நேரே கைகூப்பி ரிஷி மந்திரம் பாடுகிருர். பகதிகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன, நீரும் காற்றும் சிரிக்கின்றன. இஃதத்தனையும் இயற்கை