பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாமிவள் பார்வைக்கு நேர் பெருந் தீ, வஞ்சக மின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்த ரெல்லாம் தஞ்சமென் றேயுரைப்பீர்; அவள் பேர், சக்தி ஒம், சக்தி ஒம், சக்தி ஒம். நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்: அல்லது நீங்குமென்றே யுலகேழும் அறைந்திடு வாய் முரசே! சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு சொல்லு மவர் தமையே அல்லல் கெடுத் தம்ரர்க்கிணை யாக்கிடும் ஒம், சக்தி ஒம், சக்தி ஒம். நம்புவ தேவழி யென்ற மறைதன்னை நாமின்று நம்பிவிட்டோம்; கும்பிட்டெந் நேரமும் சக்தியென்ருலுனைக் கும்பிடுவேன் மனமே! அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாத படி உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ஒம், சக்தி ஒம், சக்தி ஒம். பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு, போற்றி யுனக்கிசைத்தோம்; அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்; தளை யத்தனையுங் கலைத்தோம்; சொன்னபடிக்கு நடந்திடுவாய், மனமே தொழில் வேறில்லைக ாண்; இன்னும தேயுரைப் போம், சக்தி ஒம், சக்தி ஒம், சக்தி ஒம், சக்தி ஒம். (1) (2) (3) (4)