பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I76 வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாகி விளங்கிடு வாய், தெள்ளு கலைத் தமிழ் வாணி, யுனக்கொரு, விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத்தனை பொழுதும் பயனின்றி யிரா தென்ற விைனிலே வெள்ள மெனப் பொழிவாய், சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்! (5) 11. முதற்கிளை இன்பம் (குறிப்பு : இவ்வுலகமே மாயை' என்பதைப் பாரதியார் ஒப்புக்கொள்வதில்லை. “உலகம் பொய்; அது மாயை, அது பந்தம்; அது துன்பம்: அது விபத்து; அதைவிட்டுத் தீர வேண்டும். இந்த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடு கிறது. ஒரு தேசத்திலே படித்தவர்கள், அறிவுடை யோர், சாஸ்திரக்காரர் எல்லோரும் ஒரே மொத்த மாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லெளகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம்போல வாழ்க் கையன்ருே? பூர்வ மதாசார்யர் 'பாரமார்த்திக மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லெளகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகுஜனவாக்கு நமது தேசத்தில் பலித்துப்போய் விடாதோ? இகலோகம் துன்ப மென்று நம்பினால், அது துன்பமாகத்தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள