பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 தொழில், வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள் எல்லாவற்றிலும் ஈசன் அள விறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிருன், விதிப்படி நடப்போர் இந்த ஸாகங்களை நன்ருக அனுபவிக்கிருர்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிருர்கள்' ('தராக" என்ற நூலில் இருந்து எடுத்து எழுதப்பட்டது.) 'தீ, குளிர்காய்ந்தால் இன்பம், இதன் தாக்குதல் இன்பம்; காற்று இதைத் தீண்டினல் இன்பம்: உயிர்களுடனே பழகினால் இன்பம்....... இவ்வுலகத்தில் உண்ணுதல் இன்பம்; உழைத்தல் இன்பம், உறங்கல் இன்பம்: ஆடுதல் இன்பம், கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல், அறிதல் ...... எல்லாம் இன்பம்தான்', என்று, "அமிர்தம் தேடுதல் என்ற கட்டுரையிலே எழுதியிருக்கிரு.ர். இதைப் பல இடங்களிலே சொல்லி இருக்கின்ருர். என்ருலும், இதற்காகவே ஒரு தனிக்கட்டுரையும் வரைந்திருக்கிரு.ர். இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, வசன கவிதையும் æ-6ቕንዐr நடையும் கலந்தது என்றுங் கூறலாம்.) 1 இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து: காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது. பா. க.-12