பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 இந்தக் கண்ணிகள் அந்தப் பண்டாரங்கள் பாதி யிரவில் பாடுவதை அந்த சமசானத்தில் பாடக் கேட்ட போது எனக்கு மயிர்ச் சிலிர்ப்புண்டாயிற்று. அப்போது தலைமைப் பரதேசி என்னை நோக்கிச் சொல்லுகிருன் :'காளிதாஸா! அடே! அந்தப் பெண்கள் தீவட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி ஆட்டமாடிப் போயினரே அவர்கள் யார், நீ அறிவாயா!' என்ருன். 'அறியேன், அவர்கள் யார் சொல்லு' என்றேன். "அவர்கள் அத்தனை பேரும் பேய்கள். இங்கு மாறுவேஷம் பூண்டு, உனக்கு வேடிக்கை காட்டும் பொருட்டுத் தருவித் தேன்” என்ருன். "நீ யார்?' என்று கேட்டேன். "நான் இந்தச் சுடுகாட்டிலுள்ள பேய்களுக்கெல்லாம் தலைவன்' என்ருன். 12. தியானங்களும் மந்திரங்களும் (குறிப்பு : பாரதியாருக்கு தியானத்திலும், மந்திரங்களிலும் மிகுந்த நம்பிக்கை உண்டு. நான் ஸுகம்; நானே பலம்: நான் சக்தி; எனக்குச் சாவு கிடையாது என்று சொல்லிக் கொள்வதில் கவிஞர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். உலகியலின்படி பார்த்தாலும் இதற்கு ஆதாரம் இருக்கின்றது. நான் சக்தியற்றவன்; என்னல் இது முடியாது என்று சொல்லிக்கொள்வதைவிட, நான் சக்தி மிகுந்தவன்; என்னல் முடியும் என்று சொல்லிக் கொள்வதில் அதிக நன்மை உண்டு.