பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இதை ஆங்கிலத்தில் தன் கருத்தேற்றம்"auto suggestion' grgirl Irrifésair. Loßg fil&oir இப்படித்தான் வலிமை பெறுகின்றன. பாரதியாரே பல நாள் மெளனவிரதம் இருந்து, மந்திரச்சொல்லை கண்டுபிடிக்க வேண்டு மென்று மிகவும் முயன்ருராம். இந்தச் செய்தி திருமதி. யதுகிரி அம்மாள் அவர்கள் எழுதிய "பாரதி நினைவுகள்' என்ற சுவைவாய்ந்த நூலில் காணப்படுகின்றது. "ஜெயமுண்டு பயமில்லை, ஜெயபேரிகை கொட்டாடா. ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். வந்தே மாதரம் என்போம்.' போன்ற வலிமை வாய்ந்த மந்திரச் சொற்களை உண்டாக்கியவர் பாரதியார். ஒம் என்பது பிரணவமந்திரம் என்பது எல்லார்க்கும் தெரியும். மிக்க சக்தி வாய்ந்தது. அதைப்போல ஒரு சொல் உண்டாக்க வேண்டுமென்று மெளனவிரதம் இருந்து முயன்று பார்த்தாராம் பாரதியார். அவர் கவிதைக்கு எவ்வளவு தூரம் வலிமை இருக்கின்றது, எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கிருர்கள் எ ன் ப ைத அறிந்து கொள்ளும் முன்னரே அமரராகிவிட்டார் என்பது மிகவும் வருந்தத்தக்கது.) விடுதலைக்கு வழி என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப்போலே சிந்தனை செய்யவல்லேன்.