பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற் குரிய வழி செய்யவேண்டும். நான் இவ்வுலகத்துப் பொருள்களின்மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக்கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன். நான் வேண்டிக் கரையத்தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேன? ருஷிய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டி அழுங்குவேன? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளக்கும்: பகையின்றிக் காக்குமா? அன்று; பகையைப் பெருக்கும்: கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமா? அன்று: அவற்றை மிகுதிப்படுத்தும். மரணமின்றிக் காக்குமா? காக்காது. எனில், அதனை வேண்டி அழுங்குதல் பெரும் பேதைமையன்ருே? இரப்போன் தன்னைத்தான் விலைபடுத்திக் கொள் கிருன். பசுவுக்குத் தண்ணிர் வேண்டும் என்றுகூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவ மா ன ம் என்று திருவள்ளுவர் சொல்லுகிரு.ர். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்கமாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன். ஆரோக்கிய ஸம்பந்தமான மந்திரங்கள் கான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக்கொண்டு விட்டன. அவை திறனுடையன;