பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் உயிர்வாழ்வேன். 183 எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதை யெல்லாம் நான் தேர்ந்துகொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன். நான் கடவுள், ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும் படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். 13. பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் (குறிப்பு : "தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம்' என்று எடுத்த எடுப்பி லேயே முதலடியைத் தொடங்குகிருர் பாரதியார். 'பாரத தேசத்தில் ஒ வ் .ெ வா ரு வ னு க் கு ம் தற்காலத்தில் நல்ல தியானம் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும், ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள்-இவற்ருல் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவறவிடாதே" என்று எச்சரிக்கிருர் பாரதியார். பக்தி என்ற ஒரு அழகான கவிதையை இயற்றியிருக்கிரு.ர். பக்தியினல் விளையக்கூடிய நன்மை எவை என்றும் அதிலே குறிப்பிடுகின்ருர். இக்கட்டுரை ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.)