பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆதி மூலமே! அனைத்தையுங் காக்கும் தேவ தேவா, சிவனே, கண்ணு, வேலா, சாத்தா, விநாயகா, மாடா, இருளா, சூரியா, இந்துவே, சக்தியே, வாணி, காளி, மாமக ளேயோ, ஆணுய்ப் பெண்ணுய் அலியாய் உள்ள தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே, வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே, அபயம் அபயம் அபயநான் கேட்டேன், நோவு வேண்டேன், நூருண்டு வேண்டினேன், அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்; வேண்டா தனத்தையு நீக்கி வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 3. விநாயகர் நான்மணிமாலை அகவல் 8 கடமை யாவன தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல், விநாயக தேவய்ை, வேலுடைக் குமரனுய், நாராயணனய், நதிச்சடை முடியனய், பிற நாட்டிருப்போர் பெயர்பல கூறி, அல்லா யெஹோவா எனத்தொழு தன்புறும் தேவருந் தாய்ை, திருமகள், பாரதி, உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய், உலகெலாங் காக்கு மொருவனைப் போற்றுதல்இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும்; பயணிதில் நான்காம்,