பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட் டேன்' என்று ஒவ்வொருவனும் உறுதி செய்துகொள்ள வேண்டும். "தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத் தான் வளரவிடவேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது' என்று நிச்சயிக்கும் அதிகாரம்திறமை ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட் டிருக்கின்றது. இதை அநுபவத்துக்குக் கொண்டுவரும் போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற் குள் வந்து நுழைந்து கொண்டு, வெளியே பிடித்துத் தள்ளிலுைம் போகமாட்டோம்' என்று பிடிவாதஞ் செய்யும். அங்ங்ணம் சிறுமைக்கு உரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்துகொண்டு தொல்லைப்படுத்துமானல், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள, அது அங்கே தான் இருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாருன வேருெரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்து க. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்துகொள்ளும். உன்னைத் தொல்லைப் படுத்திய குட்டிச்சாத்தான் தானகவே ஒடிப்போய்விடும். தெய்வபக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத் தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம். பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக் கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு; ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனை கள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் இவற்ருல்