பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவறவிடாதே. தெய்வ பக்தியுடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாக்குமாறு ப்ரார்த்தனை செய்ய வேண்டும். வாயில்ை பழங்கதை ஒன்றை முணுமுணுப் பது அதிகப் பயன் தரமாட்டாது. உன்னுடைய உள் ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த்தனை வெளியேறவேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன், சொந்த வசனங் களில் உயிர்கலந்து தியானம் செய்வதே பயன்படும். நாஸ்திகர்கூட, இஷ்ட தெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது குறள். பரிபூர்ண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத் தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருவதுபோல, உனக் குள்ளிலிருந்து தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம்; அது பவத்திலே பார். 14. மூட பக்தி (குறிப்பு : பாரதியார் இதிலே நகைச் சுவை ததும்பக் கூறியிருக்கிருர். ஆங்கிலப்படிப்பு ஒரு பயனும் அளிப்பதில்லை என்பதை மீண்டும் சாடு கின்ருர். 'பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு