பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முதலியன பார்க்குமிடத்தே, காரிய நஷ்டம் மட்டுமன்றி, மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது. காலம் பணவிலை உடையது' என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வினே கழிக்கப்படுமாயின், அதல்ை பணலாபம் கிடையாமற் போகும். இன்று செய்யக்கூடிய கார்பத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனல், அந்தக் கார்யம் பலமான சேதமடைந்துபோகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது. அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் துரங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப்போல்ை, அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸ் ம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும். "இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமை யால் ஏற்பட்டிருக்கின்றன என்றும், ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக் கொடுத்தால் இவை அழிந்து போய்விடும் என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால், அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரயோஜனமில்லை என்பது ஸ்பஷ்ட மாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந் நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடத்துவருகிறது. ஆயிரக் கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிரு.ர்கள். இவர்கள் மூடபக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிருர்களா? இல்லை. நமது தேசத்தில்