பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J89 முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிருர்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்புதான் மேற்கூறிய ஸாமான்ய மூடபக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாகதிப்படி யோக்யமாக நடந்து வந்திருப்பார்களானல், மற்றவர் களிலும் பெரும்பாலர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிருேம். அது போலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும். ஆனல், இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய்த் தேறினவர்களிடம் மனச்சாகதிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிக மிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எததனேயோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள், இரண்டுங் கலந்தன, எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிரு.ர்கள். ஆனல் ஸ்வதந்திரம், ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம். இவை அத்தனை ஜாக்கிரதையாகக் கற்றுக்கொடுப் பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின் படி ஒழுகவேண்டுமென்றும், அங்ங்னம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத்தைக்கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக்கொடுக்கிருர்கள். ஆனல் ஒழுக்கப்பயிற்சி இல்லை. புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே,