பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கால் விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக் கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படி பந்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத்தவிர வேருென்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு, ஸ்திரீகளின்மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள், மற்றும் எத்தனையோ வியவகாரங்களில் தம் மினத்து மாதரை விலையடிமகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக் கரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகை யாடலும் ஸத்ய தெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்திபோஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைர்யமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்த படி நடவுங்கள். பந்திபோஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும்; ஸத்யபலம் முதலிய பல காரணங் களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு வித்தியாய்விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள். 15. சக்தி தர்மம் (குறிப்பு : ஆதிசங்கரர் ஹிந்துமதத்தை பல வேறு வகையாக பிரிக்கப்பட்டிருந்ததை எவ்வாறு ஆறு மதங்களாக அமைப்பதில் எவ்வாறு வெற்றி கண்டார் என்பதைப்பற்றி பாரதியார் கூறு கின்ருர். ஆறு மதங்கள் எவ்வாறு உண்டாயின என்றும் இவற்றில் விளக்குகிருர். ஆனல் ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச்