பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 யான வைதிகப் படிகளென்றும், வேதாந்தமே இவையனைத் திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னர். இது பற்றியே, அவருடைய கூட்டத்தார் அவருக்கு 'ஷண்மத ஸ்தாபனசார்யார்' என்று பெயர் சொல்லுகிருர்கள். இந்த ஆறு மதங்களாவன: 1. ஜந்திரம்-தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்வை 'இந்திரன்' என்ற பெயரால் வழிபடுவது. 2. ஆக்னேயம்-அக்னியே முதற் கடவுள் என்பது. 3. காணுபத்தியம்-பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது. 4. சைவம்-சிவனே தேவர்களில் உயர்ந்தவன் என்பது. 5. வைஷ்ணவம்-விஷ்ணுவே மேலான தெய்வம் என்பது. 6. சாக்தம்-சக்தியே முதல் தெய்வமென்பது. வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்த ரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனல் புராணங் கள் வெவ்வேருக வைத்துக்கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவ புராணங்களையும் உண்மையாக ஒப்புக் கொள்ளுவதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங் களிலும் சேர்த்துக்கொண்டார்கள். இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும், பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொதுஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்ப, மூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும், பா. க.--13