பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மதுரை மீனகதி, கஞ்சிக் காமாகதி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயர்களுடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது. நவசக்தி மார்க்கம் சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய் வங்கள் வரங் கொடுப்பதில்லை. பரமாத்மா வேருகவும் பராசக்தி வேருகவும் நினைப் பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்திருப மாக நின்று சலிக்கச்செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்குண மான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி 'லோக மாதா” என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் "என் தாய் காளி' என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் 'லோக மாதா இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வ மன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிருர் : "பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள் பக்கமுண் டெக்காலமும், பவிசுண்டு, தவிசுண்டு, திட்டாக்தமாக யம படர் எனும் திமிரம் அணுகாக் கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு, காயச் சித்திகளு முண்டு.’! -மலைவளர் காதலி, முதற்பாட்டு.