பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சாக்தம் இப்போதும் சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட் டத்துடன் வணங்கி வருகிருர்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்விக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது. ஹஅணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்ரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆரா தனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம். (தென்னுட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸ்னை என்று தனிமையாகச் செய்துவருகிரு.ர்கள். இவர்கள் புராதன கூடித்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்யம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக்கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்துவருகிருர்கள். எனவே, சில இ ட ங் க ளி ல் , "சாக்தன்' என்ருல் ரஹஸ்யமாகக் குடிப்பவன்' என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை) கணபதி வே தத்தில் பிரம்மதேவனையே கணபதி என்று ா ஷி கள் வணங்கினர். அவரே ப்ரஹ் மணஸ் பதி; அவரே ப்ருஹஸ்பதி.