பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரவண மந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி. "கனநாம் த்வா கணபதிம் ஹவாமஹே' என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேதமந்திரத்திலே பிள்ளையாரைப் பிரம்மதேவனென்று காட்டியிருப்பது தெரிந்து கொள்ளுக. "ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவித மாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்தி களாக்கி வேதம் உபாஸ்ன செய்கிறது. வேதகாலம் முதல் இன்றுவரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களே மாற்ற வில்லை. வேதம் எப்போது தொடங்கிற்ருே. யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்க ளெல்லாம் காலத்தில் மறைந்துபோயின. ஹிந்துக் களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிருர்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும் மந்திரத் தையும் ஞானத்தையும் குறிப்பிட்டு வேத ரிஷிகளால் வழங்கப்பட்டது: மந்திரநாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேதமூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை, வேதம் ப்ரஹ் மனஸ்பதி என்று கூறும்; அதாவது, ப்ரஹ்மத்தின்பதி, அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளில் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் பிரிவாகக் காட்டினலும், அந்த அந்த மூர்த்தியையே ஸாrாத் பரமாத்மாவுமாகவும் தெரிந்துகொள்ள வே ண் டு ம். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே.