பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சிவன் ஸ்ம்ஹார மூர்த்தி பரப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாrாத் பரப்ரஹ்மம். அவருடைய பெயரைத்தான் ப்ரஹ்மத்திற்கு வைத்திருக் கிறது. இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழங்குகின்றன. மேலே, ஏகம் ஸத்’ என்ல ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப் பிட்டிருக்கிருேம். மூர்த்தியுபாஸ்னைக் கூட்டத்தாருக் கிடையே, லெளகிக காரியங்களை அனுசரித்துப் பிற்காலத் தில் பல சண்டைகள் உண்டாயின. தகூடியாகத்தில் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே, பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட பொய்க் கதைகளேயன்றி வேறில்லை. இந்தக் கதைகள் வேதக் கருத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் ஹிந்துக் களுடைய தேவர்கள் ஒருவரையொருவர் பழிப்பதும் அடிப்பதும் இல்லை. 16. புராணங்கள் (குறிப்பு : புராணங்கள் முதலிலே நமது நன்மைக்காகத் தோன்றின. ஆனல் பின்னல் வரவர இப்புராணக் கொள்கை திசைமாறிப் போய்விட்டது. அந்தந்தக் காலத்து ராஜாக்கள் தங்கள் சுயநன்மை கருதி ஜனங்களின் கோட்பாடு