பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல் களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்திபேதங்கள், அதாவது குண பேதங் களைச் சிறப்பாகக் காட்டவேண்டி, சில இடங்களில் அக்கினி யையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ங்னமே மற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியை அனுசரித்து, புராணங்களுள் சில அக்கினியை மேம்படுத்தி யும், சில விஷ்ணுவை மேம்படுத்தியும், சில சிவனை மேம் படுத்தியும் காட்டுகின்றன. ஆயினும், கால நடையிலே இப் புராணங்களை மாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடைய தேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும் குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷ உரிமையாகக் கொண்டாடப் பட்டது. இதல்ை பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய்விட்டது. புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதையொட்டி, மதபேதங்கள் கட்சிபேதங்களாகி முடிந்தன. இதல்ை வைதிக மதமாகிய ஹிந்துமதம் பல பிளவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்து அரசர்களின் கொள்கை-இவற்றிற்குத்தக்கபடி ஹிந்து மத பேதங் களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின. பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசியபோதிலும், நடையிலே ஹிந்துமதஸ்தர்கள் தத்தம் புராணங்களையே தலைமையாகக்கொண்டு, அவற்றின் கருத்துக்குக் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்ய லாயினர். தம்தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதின் உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரிய அஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த