பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£204 காரணமாக இருந்ததென்று தவருகக் கருதி, வைதிக ஞானி களே, சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும், உபநிஷத்தை ஞானகாண்ட மென்றும் சொல்லலாயினர். வளிஸ்டர் முதலியவர்களைக் "கர்மிகளென்றும், பிற்காலத்துப் பண்டாரங்களை "ஞானிகளென்றும் ஜனங்கள் மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்ய பதவிகொண்டு வாழவேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன : (1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்கவேண்டும். (2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப் படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸ்ன, யோகம் முதலிய வற்றை விளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வ சரித்திரம் இவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதன வென்று கழித்துவிட வேண்டும். (3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும், ஸ்மரஸ் ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாலங்கள் முதலியவற்ருல் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்தவேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!