பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இரண்டாம் காட்சி (இந்திர சபை) (குறிப்பு : அறிவு பூர்வமாக பாரதியார் சுகமும் துக்கமும் ஒன்று, சாதுவும் துஷ்டனும் ஒன்று, ஸ்ர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று நாரதர் பாடிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிருர், சுகமும் துக்கமும் ஒன்று என்று உணர்ந்த ஞானியின் நோக்கே வேறு. இல்லாவிட்டால் தமது அன்பிற்குரிய சகுந்தலை என்ற மகள் நோய்வாய்ப் பட்டிருந்த போது அத்தனை கவலைப் பட்டிருக்க மாட்டார். 'பராசக்தி குழந்தையைக் காப்பாற்று' என்று சுவரில் மோதிக் கொள்ள மாட்டார். அறிவு சொல்லுகிறது; ஆனல் உள்ளுணர்வு அந்த அறிவு சொல்வதை மெய்யென்று உணர்ந்த காலத்தில்தான் உண்மை ஞானம் வெளிப்படுகிறது. ஆகவே "படிப்படக்கி’ என்று தாயுமானவர் சொல்வது சரியென்று புலனுகின்றது. படிப்பதால் என்ன பயன்? அப் படிப்பில்ை உள்ளுணர்வு என்ற தெளிந்த ஞானம் வெளிப்படவேண்டும். ரமண மகரிஷிகள் தன் குடிசையிலே திருட்டு நடந்த போது யாதொரு கவலையுமின்றி கம்மா பார்த்துக் கொண்டிருந்தார். தம் குடிசையிலே நிறையப் பொருள் கிடைக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்ற மடைந்ததால் திருடர்களுக்குக் கோபம் உண்டாகவே தொடையில் ஓங்கி அடித்து விட்டுச் சென்று விட்டார்கள். "ரமண