பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக் காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் பாத்திஹா (ஜபம்) ஒதி முடிந்து விட்டது. அதற்கு அனுஸ்ரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன். பல்லவி அல்லா, அல்லா, அல்லா! சரணங்கள் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கன் எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே நில்லாது சுழன்ருேட நியமஞ் செய்தருள் நாயகன், சொல்லாலு மனத்தாலுக் தொடரொளுத பெருஞ்ஜோதி (அல்லா அல்லா, அல்லா!) 2. கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாத வராயினும் பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும் கல்லாருரை நீதியின்படி கில்லாதவ ராயினும் எல்லாரும் வந்தேத்து மளவில் யமயங் கெடச்செய் (அல்லா, அல்லா, அல்லா!) எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதான் காரணம் பின்வருமாறு: பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேயே பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண் டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவச மடைந்தேன். பா. க.-14