பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 11 என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை. இடை விடாமல், அசையாமல் அவரிடம் தீராத மாருத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி 'இஸ்லாம்" என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியை களையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு, என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முற் பட்டு வாருங்கள்' என்று முஹம்மது நபி யாண்டவர் திருவாய்மலர்ந்தருளினர். இதைக்கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச் சாளிக் குருக்களெல்லோரும், தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினர்கள். அந்த சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ"அலை வஸல்லம்) அவர்களின் மருமகளுகிய அலி என்பவர் எழுந்து, 'மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினுலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா முகம்மதுர் ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது' என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி. இரண்டாவது செய்தி, முஹம்மது நபியை தமது குமஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்தபிறகு அவருக்கு மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்து கொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைத் பார்த்ததாகவும், அதினின்றும் தெய்வங்கள் த ன் னி ட த் தி ல் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவேயிருந்து, நீ நோய் வேதனை பொறுக்க