பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 13 சில நண்பரின் வேண்டுகோளுக்கும், அல்லாவின் உத்தர வுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு: இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரைவிட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக் கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப் படையை அனுப்பின்ை. இவ்விருவரும் காட்டுவழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர் களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய் பதுங்கிக் கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்:-"ஐயோ, இனி என்ன செய்யப் போகிருேம்? ஏது, நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத் தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனல் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடு வார்களோ!' என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானன். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹ அலேஹி வஸல்லம்) அவர் சொல்லுகிருர்: 'கேளாய், நண்பனே! நான் இந்த உலகத்தில் அல்லா வின் காரியஸ்தனுக வேலை செய்து வருகிறேன். அல்லா வில்ை எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்றுகூடிக் கொல்ல விரும்பிலுைம், எனக்கொரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்தபோதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற் பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதலால் எனக்கு பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்படவேண்டிய அவசியமில்லை" என்ருர்,