பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காளுர்; எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்: பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். -பாடல் 64 "பூமியிலே கண்டமைந்து, மதங்கள் கோடி! புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம் சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம், சநாதனமாம் இந்து மதம், இஸ்லாம், யூதம், நாமமுயர் சீனத்துத் 'தாவு' மார்க்கம், நல்ல "கண் பூசி மதம் முதலாப் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே; யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. —Lurru–6b 65 7. மணக்குளத்து விநாயகர் (குறிப்பு : பாரதியார் புதுவை மணக்குளத்து விநாயகர் மீது நாற்பது அழகான பாடல்கள் இயற்றியுள்ளார். பிரணவப் பொருளான ஒம் என்பது வலிமைவாய்ந்த ஒரு சொல்லாகும். இதுபோன்ற ஒரு தந்திரச்சொல் ஒன்றைத் தமிழிலிலே கண்டு பிடிக்கப் பாரதியார் மிகவும் முயற்சி செய்திருக்கிருர். அதற்காக மெளன விரதமும் இருந்திருக் கிரு.ர். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்த விநாயகர் நான்மணி மாலையில் பாரதியாரின் அறிவு முதிர்ச்சியும் சொல்வளமும் ஒருங்கு அமைந்திருப் பதைக் காணலாம். விநாயரே பல தெய்வங்களின் வடிவ மாகத் தோன்றுகிருர் என்பது பாரதியாரின் கருத்து.