பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 [4 அப்பால் அந்தக் குதிரைப்படை அவர்களைப் பாராமலே போய்விட்டது. இந்த சமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்த வுடனே, என் மனதில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைரியத்துடனிருப்பது ஸ்ாலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, "கடவுள் துணை செய்வார். எனக்கு பயமில்லை' என்று மனதுடன் சொல்வோன் உண்மையான தெய்வ பக்தன். தெய்வ பக்தி ஒன்றைத்தவிர வேறெந்த சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைரியம் கொடுக் காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்க வல்ல தீரர் கடவுளின் கருணை பெற்ருேரேயாவர். மற்றப் படி வேறெந்த பலமும் அவ்விதமான தைரியத்தைத் தராது. பாம்பென்ருல் படையும் நடுங்கும். இன்னும், மதீனுவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவை களில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கள் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணைக்கொண்டு முஹம்மது நபி வென்ருர். கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும் அவரிடத்தே யிருந்தன. ஆதலால் அவருக்கு, எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி விடுத்ததாய் மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டு முன்னர் அருளினர் அல்லா. இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களைப்பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலை