பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததி னின்றும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனல், நபி பொருட்டாக்க வில்லை. முஹம்மது நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸத்தியத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸ்கங்களையம், லெளகர் யங்களையும், வாழ்வையும், செல்வத்கையும், அதல்ை விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணை களையும், உயிரின் பாதுகாப்பையுங்கூட ச் சிறிய பொருளாகக் கருதினர். இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார். அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனவுக்கும் குமாரராக கி. பி. 570ம் ஆண்டில் நமது நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு கிடையாது. கேள்வியால் மஹா பண்டிதரானர்; ஸஹவாஸ்த்தால், உயர்ந்த ஞானி யாளுர்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும், தீர்க்க தரிசியுமானர். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரி யான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண் டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கி விட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி. பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது நபி வானுலகம் புகுந்தார்.